news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

மன்னாரில் கோர விபத்து - இராணுவ வீரர் பலி - 11 பேர் காயம்

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில்  சனிக்கிழமை (24) மாலை  இராணுவ வாகனம்   விபத்துக்குள்ளாகிய  நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்துள்ளனர். தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி  சனிக்கிழமை (24) மாலை இராணுவத்தினர் பயணம் செய்த டிபென்டர் ரக வாகனம்  கீளியன்  குடியிருப்பு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் போது குறித்த வாகனத்தில் ...

புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி

மாஸ்கோ: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீசல் விலையை குறைக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்ததை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் டீசல்விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடை...

காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்

தெற்கு கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.அல்-சினாவ் (al-Sinaa) பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டமே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது. அருகிலுள்ள அல்-மாவாசி (al-Mawasi) "பாதுகாப்பான மண்டலத்தில்" இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், குழந்தைகள் உட்பட மேலும் பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.வடக்கு காசா நகரில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டத...

வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

வங்கக்கடலில் உருவாகும் புயல்: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும், அக்டோபர் 28-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக ஆந்திர பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன...

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

பதுளை மாவட்டத்தின் வெலிமடை – நுகதலாவையிலிருந்து தங்கமுவ ஊடாக அம்பகஸ்தோவ நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், கிராம்பே பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (24) சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மதுபோதையில் காரைச் செலுத்திய சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த லொறியுடன் மோதியதுடன், வீதியோரத்திலிருந்த வீடொன்றின் ...

ரஷ்யாவிடம் சிக்கி சாகக்கூடாது.. காலையே வெட்டி 8 மாதம் போராடி தப்பிய உக்ரைன் வீரர்.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்

ட்ரோன்களின் கழுகு பார்வையில் சிக்கியதால் வீசப்பட்ட குண்டில் இறந்த நண்பன், படுகாயமடைந்த பிறகு மயக்க மருந்தோ மருத்துவ உதவியோ இன்றி கத்தியை கொண்டு தன் காலை துண்டித்தது எல்லாம் போர்க்களத்தின் உச்சக்கட்ட கொடுமையையும், உயிர் பிழைப்பதற்கான மனிதனின் விவரிக்க முடியாத போராட்டத்தையும் காட்டுகிறது.அந்த ராணுவ வீரர் யார்? உயிர் பிழைப்பதற்காக தனது காலை வெட்டி எப்படி ரஷ்யா தாக்குதலில் இருந்து தப்பினார்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. போர்.. இன்று ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வர...

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள தெற்கு துறைமுக நகரமான பண்டார் அ அப்பாஸ் மீது பறந்த அமெரிக்காவின்  ரக ஆளில்லா விமானத்தை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளது.ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலயமைப்பின் கீழ் இயங்கும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஆளில்லா விமானத்தை வழிமறித்து அழித்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியி...

ஹபராதுவை விபத்து: பேருந்தின் சாரதி, நடத்துனர் கைது!

ஹபராதுவை, கொக்கல பகுதியில் ரயில் கடவையில் ரயில் மோதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.கொக்கல பகுதியில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் கொட்டாவ பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த பேருந்து இந்த விபத்துக்குள்ளாக...

காதலி கண்ணீர் மல்க அழைத்தும் கேட்காத இளைஞர்: 12 மணி நேரப் போராட்டம்

காதலித்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர், 1.32 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின் அழுத்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பரிஹார் என்ற இளைஞர், பீகாரின் பாங்கா மாவட்டத்திற்குட்பட்ட ஃபுல்லிடுமர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்க மற...

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained

இஸ்ரேலின் தேர்தல் முறையின் மிக முக்கிய அம்சம் அதன் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation). அமெரிக்கா, இந்தியா அல்லது பிரிட்டனில் உள்ளது போல நாடு தனித்தனி தொகுதிகளாகப் பிரிக்கப்படுவதில்லை. மாறாக, முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கருதப்படுகிறது.இஸ்ரேலில் இதுவரை ஒரு கட்சி கூட தனியாக ஆட்சி அமைத்ததில்லை. காரணம் அதன் தேர்தல் முறை.உலகிலேயே மிகவும் விசித்திரமான, மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல்.இஸ்ரேலின் ...

சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் தனமல்வில, போதாகம, மீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத இளைஞன் என தெரியவந்துள்ளது.கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான, குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிகவெவ 280 வத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த தென்னந்தோட்டத்தைச் சுத்தம் செய்வதற்காக குறித்த இளைஞர் நேற்று (23) அங்கு சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.என...

ராஜிவை சந்தித்த முதல் தருணம் வீடியோ வெளியிட்டார் சோனியா

புதுடில்லி: ராஜிவை சந்தித்த முதல் தருணம், தனது வாழ்க்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசு பொருளாகி இருக்கிறது.பிலாங்கிங்; எ ஜர்னி ஆப் லவ்' (Belonging; A Journey of Love) என்ற பெயரில் தமது வாழ்க்கை குறித்து சுயசரிதை புத்தகம் ஒன்றை சோனியா வெளியிடுகிறார். 2026ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இந்த புத்தகம் வெளியாகிறது.ஹார்பர் காலின்ஸ் என்ற நிறுவனம் அவரின் புத்தகத்தை வெளியிடுகிறது. அதற்கு முன்னோட்டமாக, ராஜிவ் உடனான தமது முதல் சந...

ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்?

டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கர்களுக்கு, ஈரான் சாவு பயத்தை காட்டி உள்ளதாகவும், இதனால் தற்போது மத்திய கிழக்கில் இருந்து கூட்டம் கூட்டமாக அமெரிக்கர்கள் வெளியேறி வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் இருநாடுகள் இடையேயும் அணுஆயுதம் உள்பட பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இதில் அமெரிக்கா - ஈரான் இடையே கருத்து மு...

குரங்கின் அன்பு கட்டிப்பிடி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளரை ஒரு குரங்கு அன்போடு கட்டிப்பிடிக்கும் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. கட்டிப்பிடி வைத்தியம் என நெட்டிசன்களால் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரை நோக்கி மெதுவாகச் சென்றது. பொதுவாகக் குரங்குகள் கடைகளுக்குள் நுழைந்தால் பொருட்களைப் பறிப்பது அல்லது உணவைத் தேடுவது வழக்கம். ஆனால், இந்த காணொளியில் குரங்கு எந்த ஒ...

குவைத்தில் வெவ்வேறு வீடுகளில் இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு : மரணங்களில் சந்தேகம் நிலவுவதால் குவைத் பொலிஸார் தீவிர விசாரணை

குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கை பெண்கள் இருவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அலி சபா அல்-சேலம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தே இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவற்றை குவைத் பொலிஸார் இயற்கைக் கடந்த மரணம் என வழக்குகளைப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.முதல் சம்பவமாக, அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறையிலிருந்து ...

நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை... நீண்ட காலம் எடுத்து எழுதிய பாடல்... விரைவில் எழுதிய பாடல்... சிவாஜிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய பாடல் பற்றி...நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் தமிழிருக்கும் வரை என்றென்றும் நினைத்திருக்க வேண்டிய ஒப்பற்ற கவிஞர் கண்ணதாசன், "கன்னியின் காதலி" படத்தின் "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே" பாடல் மூலம் திரைத் துறையில் நுழைந்தார்.4000-க்கும் அதிகமான சாகா வரம்பெற்ற பாடல்கள் தந்த அவரின் கடைசி படப் பாடல் "மூன்றாம் பிறை" படத்தில் இடம் பெற்ற "கண்...

ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ

ஓமன் நாட்டின் கடற்கரைப் பகுதியில் அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் 2 துள்ளிக்குதித்து நீந்திச் சென்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலில் தெரிந்த அதிசயம் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குந்தாப் கடற்கரையில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் சிலர் படகு சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் சாதாரண சாம்பல் நிற டால்பின்கள் கூட்டமாக நீந்திச் சென்றன. அவற்றுடன் சேர்ந்து முற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அரி...

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நேரம் வீட்டினை உடைத்து 18 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் உதயபுரம் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விச...

“அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை” - ஈரானின் மிகப் பெரிய ஆயுதம் தயாராகிறது! ; அமெரிக்காவுக்கு கடும் மிரட்டல்

அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் “அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை”  (father of all bombs) என வர்ணிக்கப்படும் ஒரு புதிய ஆயுதத்தை வெளியிடத் தயாராகி வருவதாக அதன் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் ஹொசெய்ன் மொஹேபி தெரிவித்துள்ளார். “நாங்கள் ‘அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை’ என்ற ஆயுதத் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யும் கட்டத்தில் இருக்கிறோம். இது எதிரிக்கு முற்றிலும் புதியது” என்று ஈரானின் யங் ஜர்னலிஸ்ட்ஸ் க்ளப் செய்தி நிறுவனம் ...

தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?

தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில் சிறுமியின் தாய் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை மற்றும் 12 வயது தம்பி பலத்த காயமடைந்தனர்.இதைத்தொடர்ந்து, 15 வயது சிறுமியையும் அவரது தங்கையையும் மிரட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றத...

டிரம்ப் மருமகன் கணக்கிற்கு ரகசியமாக மாற்றப்பட்ட ரூ.35,000 கோடி: டச்சு உளவாளி அமைப்பு

 ":"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியாவிடம் இருந்து சுமார் 35,000 கோடி ரூபாயை ரகசியமாக தனது வங்கி கணக்கிற்கு பணப்பறிமாற்றம் செய்துள்ளதாக டச்சு உளவாளி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது..டிரம்ப் மருமகன்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப்பை 45 வயதான ஜாரெட் குஷ்னர் என்பவர் திருமணம் செய்துள்ளார். இவர் அமெரிக்காவின் தற்காலிக சமாதான பேச்சுவார்த்தை தூதுவர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார்.குஷ்னரின் ஐபோனை ரகசியம...

பைத்தியம் போல கதை சொல்லாமல் தெரிந்ததை பேசுங்கள்.. சபையில் அர்ச்சுனாவுக்கு விஜித ஹேரத் பதிலடி

நாடாளுமன்றத்தில் தெரிந்ததை மட்டும் பேசுங்கள். தேவையற்ற விடயங்களை தவறாகப் பேசவேண்டாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை வெளிவிவகார அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலபுன் அமோர்ன்விவாட் அழைப்பின் பேரில் செப்டெம்பர் 14 முதல் 16ஆம் திகதி வரை மேற்கொண்ட தாய்லாந்திற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்த...

தந்தையால் சீரழிக்கப்பட்ட 16 வயது மகள்: அதிபரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்தது

கல்வி கற்று, எதிர்காலக் கனவுகளுடன் வாழ வேண்டிய 16 வயதுச் சிறுமி ஒருவருக்கு, பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்க வேண்டிய தந்தையே துன்பம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம், தலவாக்கலை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி பல வாரங்களாகப் பாடசாலைக்கு வருகை தராததை அவதானித்த பாடச...

அமெரிக்காவின் நட்பு நாடுகளை லிஸ்ட் போட்டு தூக்கும் ஈரான்? அடுத்து கத்தார்!

காணாமல் போன விமானிகள் விவகாரம்: கத்தாருக்கு ஈரானின் கடும் எச்சரிக்கை!மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், காணாமல் போன தங்களது 3 போர் விமானிகளைக் கத்தார் சிறைபிடித்து வைத்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கத்தார், விமானிகளை சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளது. இதனால் கத்தார் மீது ஈரான் ராணுவரீதியிலான தாக்குதல்களை தொடங்குமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம் .கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் ம...